சூப்பர் சிங்கர் சௌந்தர்யாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? இவ்வளவு பெரிய குடும்பமா? புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக சௌந்தர்யா கலந்து கொண்டவர். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார்.

   

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக பணிபுரிந்து வருகின்றனர்.

அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாடகி சௌந்தர்யா.இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

இந்நிலையில் பாடகி சௌந்தர்யா, தனது அப்பா, அம்மா என முழு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அவரின் Family போட்டோ..