சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா மோகனின் கணவர் யாரு தெரியுமா? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் பேராதரவுடன் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தொகுத்து வழங்கி வரும் மாகாபா, ப்ரியங்கா இருவருக்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்போதுமே மிகவும் பிடித்த தொகுப்பாளர்கள் தான். சீசன் 1ல் இருந்து 8 வரை மக்களில் வரவேற்பில் வளர்ந்து வந்துள்ளது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. லாக் டவுன் போட்டதால் இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

   

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான். பல காலமாக இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் ஸ்வேதா மோகன். எப்போதும் ஜாலியாகவே இருப்பார், மற்றவர்கள் பாடும்போதும் அழகாக ரசிப்பார். தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார் ஸ்வேதா மோகன்.

பாடகி ஸ்வேதா மோகன், பிரபல பாடகி சுஜாதாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாடகி ஸ்வேதா மோகனின் கணவர் அஸ்வின் என்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இவர்கள் இருவருக்கும் அழகிய மகள் ஒருவர் பிறந்துள்ளார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்..