‘சூப்பர் சிங்கர்’ பிரித்திகாவை ஞாபகம் இருக்கா உங்களுக்கு ?…. மாடல் டிரஸ்சில் சும்மா கலக்குறாங்களே!… நீங்களே பாருங்க…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரித்திகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் நிகழ்ச்சியில் 5வது சீதனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் பிரித்திகா. இவர் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர் தனது கணீர் குரலால் பலரையும் கவர்ந்து போட்டியில் வெற்றி பெற்று பரிசை தொகை ரூபாய் 40 லட்சத்தை தட்டி சென்றார். இதை தொடர்ந்து மேடை பாடகியாக  சிறு சிறு நிகழ்ச்சிகள் பாடி வந்த பிரித்திகா முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

   

இவர் ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தில் ‘ரயில் விட போலாமா’ எனும் பாடலை பாடியுள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது 18 வயதாகும் பிரித்திகா சொந்தமாக யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் வைத்துள்ளார்.

இதில் அவர் நிறைய வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் இருக்கும் கலக்கல் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ‘கிராமத்தில் இருந்து வந்த பிரித்திகாவா இவர்?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….