பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் தனது சிறுவயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான பச்சை குதிரை, சரோஜா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ராஜ்கமல். இவர் வெள்ளித் திரையில் நடித்து பிரபலமானதை விட சின்னத்திரையின் மூலம் தான் அதிகமான பிரபலம் அடைந்தார். இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்..
இதைத்தொடர்ந்து தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டும் வெள்ளித்திரையில் தலை காட்டி வருகிறார். சீரியல் நடிகர் ராஜ்கமல் பிரபல சீரியல் நடிகையான லதா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகள் 30க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் பல தமிழ் படங்களிலும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து தமிழ் இல்லத்தரசிகளிடையே பெரும் பிரபலம் அடைந்தவர். இவரும் நடிகர் ராஜ்கமலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு லாகா, ராகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ராஜ்கமல் தனது சிறு வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ரஜினிகாந்த அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்….