தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் ஜீ தொலைக்காட்சியும் ஒன்று. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதில் செம்பருத்தி சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இதில் ஆதி- பார்வதி ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. மேலும் இதில் பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானாவும், ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தனர்.
இந்த ஜோடிகளுக்காகவே செம்பருத்தி சீரியலை அதிகப்படியானோர் பார்த்து வந்தனர். இந்த சீரியல் செய்யாத சாதனைகள் இல்லை, ஒரு காலத்தில் இந்த சீரியல் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது. இடையில் சீரியலில் ஏகப்பட்ட நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக சீரியல் நாயகன் மாற்றம் ஆன பிறகும் ரசிகர்கள் மத்தியில் சீரியல் படு பிரபலமாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் அந்த சீரியலில் இருந்து விலகி கொண்டதால் அவருக்கு பதிலாக அக்னி என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையின் மூலம் பிரபலமான கார்த்திக் ராஜ் முகிலன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அப்படம் பிரபல OTT தளத்தில் வெளியானது. இதனிடையே தற்போது கார்த்திக் ராஜ் தனது நண்பருடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.