தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் அதற்கு இணையாக தொலைக்காட்சியின் நடிகைகளுக்கும் இருக்கிறது. சீரியல் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்கள். தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் ஜீ தொலைக்காட்சியும் ஒன்று. அதில் செம்பருத்தி சீரியல் நடிகைகளுக்கு பெரிய இடம் உண்டு. ஷபானா மற்றும் ஜனனி இருவரும் செம்பருத்தி சீரியலில் ஒன்றாக நடிக்க நல்ல தோழிகளாக இருந்துள்ளனர்.
ஜனனி சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறினார். இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் செம்பருத்தி சீரியல் பிரபலங்களான ஷபானா மற்றும் கதிரை சந்தித்துள்ளார். அவர்கள் மூவரும் துளி கூட மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,