செம ஸ்டைலான கலர் உடையில் பாரீஸில் இளையராஜா எடுத்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- யுவன் வெளியிட்ட போட்டோ

இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ் சினிமா என்றாலே இவர் முக்கியமான பங்கு வகிப்பார்.

இனி வரும் காலங்களில் எத்தனை புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் இவரது பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது.

80களில் இவரது இசையில் வந்த பாடல்கள் அனைத்துமே இப்போதும் அதிகம் ஒளிபரப்பப்படுகிறது. இளையராஜா என்றாலே வெள்ளை வேஷ்டி, ஜிப்பா தான் நியாபகம் வரும்.

தற்போது யுவன் ஷங்கர் ராஜா 80களில் இளையராஜா வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் போது பாரீஸில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கலர் கோட், பேன்ட் கேப் என ஸ்டைலான உடையில் போஸ் கொடுத்து இளையராஜா எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம இசைஞானியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.