சேலையில் புன்னகையுடன் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “இது என்ன மாயம்” என்ற படம், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தான் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். அதன் பிறகு தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

   

மேலும், ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் இவர் என்று சொல்லலாம். மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக “அண்ணாத்த” படத்தில் நடித்திருந்தார். தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் “மாமன்னன்” படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சமீபகாலமாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது மஞ்சள் நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.