ஜீ தமிழ் யாரடி நீ மோஹினி சீரியலில் திடீர் திருப்பம்! வெளியான வீடியோ- ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. முன்னணி தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானது ஜீ தமிழ்.

   

 

இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதிலும் யாரடி நீ மோஹினி, செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்களுக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். யாரடி நீ மோஹினி சீரியல் விரைவில் முடிவடைகிறது என்று சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் யாரடி நீ மோஹினி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் ஸ்வீதா செய்த சூழ்ச்சியால், முத்தரசன் மற்றும் ஸ்வீதாவிற்கு திருமணம் நடக்க போகிறது என தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருந்த எபிசோடில், முத்தரசன் ஸ்வீதாவிற்கு தாலி கட்ட செல்லும் பொழுது, அந்த தாலி வெண்ணிலா கழுத்திற்கு மாற்றி கட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் முத்தரசன். இதோ அந்த வீடியோ..