ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா? இந்த பிரபல நடிகர் தானா..!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தமிழில் ஜெய் ஹிந்த், முதல்வன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அன்றைய சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் பல மக்களை கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன். நன்றி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன். இவர் இதற்கு முன் கன்னட படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமாகி இருந்தார்.

   

ஆனால் மற்ற மொழிகளை விட தமிழ் திரையுலகம் மூலமாக தான் இந்தியளவில் நடிகராக பிரபலமானார் நடிகர் அர்ஜுன். பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் முதன் முதலில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடிக்க, கதநாயகியாக பிரபல நடிகை மதுபாலா நடித்திருந்தார். ஆனால் ஜென்டில்மேன் படத்தில் அர்ஜுனுக்கு முன்பே முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சரத்குமாராம்.

ஆம் சங்கர் இயக்கத்தில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சக்கைபோடு போட்ட ஜென்டில்மேன் திரைப்படத்தில் கதாநாயகனாக முதல் முதலில் சரத்குமார் நடிக்கவிருந்தார். ஆனால் அப்போது குரு பவித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாராம். அந்த படத்திற்காக மீசை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க தவிர்த்துவிட்டாராம்.