உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் ரியாலிட்டி கேம் ஷோ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஏராளம். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் தொடங்கும் பிக் பாஸ் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் சிறுது தாமதாக தொடங்கப்பட்டது.
பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது. பிக் பாஸ் 4வது சீசன் முடிந்ததில் இருந்து ஒரே கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளார்கள். இதற்கு முன் இருந்த பிக்பாஸ் பிரபலங்கள் இவ்வளவு கொண்டாட்டத்தில் தொடர்ந்து இருந்தது இல்லை. பிக் பாஸ் 4வது சீசன் முடிந்ததில் இருந்து ஒரே நிகழ்ச்சிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். அண்மையில் அர்ச்சனாவின் தங்கை சீமந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாகி வந்தன. தற்போது பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஒரு கடை திறப்பு விழாவிற்கு ஜோடியாக சென்றுள்ளனர். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram