தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவுடன் டேட்டிங்கில் இருந்த இவர் பின்னர் சில காரணங்களால் பிரிந்தார்.
இந்த நிலையில் சித்தார்த் கடைசியாக மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடித்திருப்பார். அந்தப் படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர். இதனிடையே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில் அண்மையில் சலூன் ஒன்று இருக்கு இவர்கள் இருவரும் சென்று உள்ளனர்.
அங்கு இருவரையும் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கேள்வி எழுப்பி வருகிறது , அது என்னவென்றால் இவர்கள் இருவரும் காரில் செல்லும் புகைப்படத்தை பார்த்துவிட்டு காதலிக்கிறார்களா .? என்று ஒரு சிலர் கமெண்ட் செக்ஷனில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் .,