டிராக்டரை விட நாட்டு மாடு தான் கெத்து… ஏன் தெரியுமா.? இந்த விடியோவை பாருங்க உங்களுக்கே தெரியும்..!

முன்பெல்லாம் விவசாயிகள் அனைவரது வீட்டிலும் மாடு இருக்கும். வயலில் நெல் அறுவடை முடிந்ததும் அந்த வைக்கோலை மாடுகளுக்குக் கொடுப்பார்கள். இதுபோக மாட்டின் சாணம் நெல் வயலிலும் உரமாக பயன்படும்.

ஆனால் இப்போதெல்லாம் நாட்டுமாடுகளை வளர்ப்பவர்களே வெகுவாகக் குறைந்து வருகின்றனர். இப்போது விவசாயத்தில் முழுக்க எந்திரங்களின் ராஜ்ஜியம் வந்துவிட்டது. இதனால் இப்போதெல்லாம் விவசாயத்தில் உழவு மாடு பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

இப்படியான சூழலில் உழவு தொடங்கி அத்தனை விவசாய வேலைகளுக்கும் பயன்பட்டுவந்த நாட்டு மாடுகளும் அரிதாகிப் போய்விட்டது. இதோ இப்போது, பெரிய லோடுகளை ஏற்றிக்கொண்டு டிராக்டரே வயல் சேரில் மாட்டிக்கொண்டு முணங்கிக்கொண்டு நிற்கிறது.

ஆனால் நம் நாட்டு மாடுகளோ சும்மா குதிரையைப் போல் விறு, விறுவென ஓடிவருகின்றன. இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகப் பரவிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)