டீ சர்ட்டில் மேக்கப் இல்லாமல் ராதிகா வெளியிட்ட புகைப்படம்.. உச்சக்கட்ட மகிழ்ச்சியினை நீங்களே பாருங்க

சென்னையில் நேற்று பெய்த மழையை ரசித்தப்படி இருக்கும் புகைப்படத்தை நடிகை ராதிகா வெளியிட்டுள்ளார். 80களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா, பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சத்தில் இருப்பவர்.

   

தற்போதும் தனது இடத்தினை தக்கவைத்து வரும் இவர் சினிமா மட்டுமின்றி, சீரியல் தயாரிப்பிலும் அசத்தி வருவதோடு, சின்னத்திரையில் சித்தி தொடர் மூலம் ஒட்டுமொத்த மக்களின் சித்தியாக வலம் வருகின்றார்.

இந்த சீரியலில் இரண்டாம் பாகம் சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்த வந்த ராதிகா, சொந்த காரணங்களுக்காக, அந்த சீரியலிருந்து விலகியுள்ளார்.

பின்பு தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கமலுடன் கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் நேற்று கருமுகம் சூழ்ந்து மாலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழையை வீட்டில் தனது கணவர் சரத்குமாருடன் நடிகை ராதிகா ரசித்து பார்த்துள்ளார்.

அந்த அழகிய தருணங்களை புகைப்படங்களாக எடுத்து ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.