
ஒரு பெண்மணி போன் செய்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்காக ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்கும் கால் ரெக்கார்டை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இன்றைய சூழ்நிலையில் ஏகப்பட்ட அனாதை இல்லங்களும், முதியோர் இல்லங்களும் செயல்பட்டு வருகின்றது. அங்கு இருப்பவர்களுக்கு பலரும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் இதை வைத்து போலியாக ஐடி கிரியேட் செய்து பலரும் எங்களிடம் ஆதரவற்ற அனாதை குழந்தைகள் முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு உதவி செய்யுங்கள் என்று கூறிக்கொண்டு பல கோடி நபர்கள் மக்களிடம் இருந்து பணத்தை திருடிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் உதவி செய்ய நினைப்பவர்களும் பயப்படுகிறார்கள். இதில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது தெரியவில்லை .
தொடர்ந்து செல்போன்களில் மெசேஜ்களும் போன்களும் நாள் ஒன்றுக்கு ஒரு தடவையாது வந்து கொண்டு தான் உள்ளது. அப்படி ஒருவர் போன் செய்த வீடியோவை தான் ஒரு நபர் வீடியோவாக ரெகார்ட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதலில் கால் செய்த அந்த பெண்மணி நாங்கள் அனாதை இல்லம் நடத்தி வருவதாகவும், எங்களிடம் நிறைய ஆதரவற்ற குழந்தைகள் பெரியோர்கள் இருக்கிறார்கள்.
உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கேட்க அதற்கு அவர் தற்போது எனக்கே நான்கு பேர் உதவி செய்ய வேண்டும் என்ற நிலைமையில் தான் இருக்கிறேன் என்றும் நான் பெரிய நிலைமைக்கு வந்த பிறகு கட்டாயம் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறுகிறார் மேலும் தன்னுடைய கமெண்ட் பக்கத்தில் தினமும் இரண்டு மூன்று போன்கள் இதுபோன்று வருகின்றது.
ஆனால் யார் சொல்வது உண்மை என்பதே தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் போது நமக்கே சந்தேகம் தான் எழுகின்றது. மோசடி செய்வதற்கு இப்படி ஒரு வழியை தேர்வு செய்தால் எத்தனையோ அனாதை குழந்தைகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நபர்களும் உதவி செய்யாமல் இருந்து விடுகிறார்கள். எனவே இப்படி எல்லாம் யாரும் செய்ய வேண்டாம் என்று பலரும் தெரிவித்துள்ளார்கள்.
View this post on Instagram