
தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர் தான் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். மேலும், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. மேலும், வெற்றிமாறன் இயக்கிய “வட சென்னை” படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய போட்டோசை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வரும் நடிகை ஆண்ட்ரியா, ஜீன்ஸில் பின் பக்கம் திரும்பி போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram