தங்கையின் பிறந்த நாளை மறந்த அண்ணன்.. அவசர நேரத்தில் கொடுத்த பரிசு.. ஒரே நாளில் கோடீஸ்வரியாக அதிசயம்!

அமெரிக்காவைச் சேர்ந்த Elizabeth Coker-Nnam. என்ற பெண்ணுக்கு, கடந்த மாதம் பிறந்த நாள் வந்ததுள்ளது. அவரின் பிறந்த நாளுக்கு Elizabeth-யின் நண்பர்கள் எனப் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சிலர் Elizabethக்கு பிறந்த நாள் பரிசையும் வழங்கினார்கள். இதையடுத்து, எந்த வருடமும் சரியாகத் தங்கைக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவரது அண்ணன், இந்த பிறந்த நாளை மறந்தே போயுள்ளார்.

   

மேலும், சில நாட்கள் கழித்து தங்கை Elizabeth-யின் பிறந்த நாள் நினைவுக்கு வர, ஐயோ இப்படி மறந்து விட்டோமே என எண்ணி, என்ன பிறந்த நாள் பரிசு வாங்கி கொடுப்பது எனத் தெரியாமல் அவசர கதியில் ஒரு லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

அதன் பின்னர், பல வாரங்களுக்குப் பின் ஒரு நாள் அண்ணனும் தங்கையும் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த லாட்டரி டிக்கெட் என்ன ஆச்சு என்று கேட்டிருக்கிறார்.

ஆனால், அதைத் தான் மறந்தே போனதாகக் கூறிய Elizabeth, உடனே அதை எடுத்துச் சோதித்திருக்கிறார். அப்போது அவர் எதிர்பாராத ஒரு ஆச்சரியம் அவருக்குக் காத்திருந்திருக்கிறது.

ஆம் elizabethக்கு அந்த லொட்டரியில் முதல் பரிசு விழுந்திருப்பது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, 500,000 டாலர்கள் பரிசு பெற்று, ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார்.

இதனால், அண்ணனும் தங்கையும், தொலைப்பேசியிலேயே கத்திக் கூச்சலிட்டு தங்கள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கை கோடீஸ்வரியானதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த Elizabethயின் அண்ணன், இது தெரிந்திருந்தால் அந்த டிக்கெட்டை நானே வைத்திருந்திருப்பேனே என வேடிக்கையாகக் கூறியுள்ளார்.

அதற்கு Elizabeth கவலைப்படாதீர்கள், உங்கள் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத ஒரு பரிசு தருகிறேன் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

அவசர கதியில் வாங்கி கொடுத்த பிறந்த நாள் பரிசு ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.