தனது கணவர் அஜித்தை கட்டியணைத்தபடி முதல் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஷாலினி…. குவியும் லைக்ஸ்கள்…. புகைப்படம் இதோ….

முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி தற்பொழுது தனது கணவர் அஜித்தை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

‘அமர்க்களம்’ படப்பிடிப்பின் போது இணைந்து நடித்த நடிகர் அஜித் ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே 1999ல் நடிகர் அஜித் தனது காதலை ஷாலினி இடம் வெளிப்படுத்தினார். அஜித்தின் காதலை ஏற்றுக் கொண்டார் ஷாலினி. இதைத்தொடர்ந்து இருவரும் 2000ல் திருமணம் செய்து கொண்டனர்.

   

இவர்களுக்கு ஆத்விக் என்ற மகனும் அனுஷ்கா என்று மகளும் உள்ளனர். 2001 இல் வெளிவந்த ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படத்துக்கு பின்னர் இவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தற்பொழுது இவர் தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு சினிமாவை விட்டு விலகி உள்ளார். இந்நிலையில் நடிகையும், அஜித்தின் மனைவியான  ஷாலினி தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார்.

இதனை அவரது சகோதரியும் நடிகையுமான ஷாமிலி உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் shaliniajithkumar2022 என்று யூசர் ஐடியில் ஷாலினி இணைந்துள்ளார். நடிகர் அஜித்துடன் புகைப்படம் ஒன்றை ஷாலினி பதிவிட்டு இருந்த நிலையில் அது இவரது அதிகார பூர்வ பக்கம் தான் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது நடிகை ஷாலினியை அஜித் ரசிகர்கள் பின்தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நடிகை ஷாலினி தனது கணவர் அஜித்தை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு  வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….