
‘சுந்தரி’ சீரியல் நடிகை கேபிரியல்லா தனது சகோதரிகளுடன் இணைந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை முதன்முறையாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் தான் கேபிரியல்லா. இந்த சீரியலில் இவர் தன் கணவர் கார்த்திக்கால் ஏமாற்றப்படுகிறார். கார்த்திக் அணு என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்து தற்பொழுது அனு கர்ப்பமாக உள்ளார். அனுவிற்காக அனைத்து உண்மைகளையும் பொறுத்துக் கொண்டு சுந்தரி அமைதி காத்துக் கொண்டு வருகிறார்.
அணுவை தவிர கார்த்திக் தான் சுந்தரியின் கணவர் என்பது சீரியல் உள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு தனது கலெக்டர் ஆகும் லட்சியத்தை நோக்கி தற்போது சீரியல் பயணித்துக் கொண்டுள்ளார் சுந்தரி. இந்நிலையில் சீரியலை போலவே சுந்தரியின் நிஜ வாழ்க்கையிலும் சோகம் நிறைந்தது தான்.
நடிகை கேப்ரில்லா திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து சேர்ந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு தனது அம்மா அப்பாவின் சப்போர்ட் மூலம் அவர் தற்பொழுது இந்த நிலை அடைந்துள்ளார். அவர்கள் ‘நாங்கள் இருக்கிறோம் நீ கவலைப்படாதே’ என்று கூறியதை நம்பி தற்பொழுது இவர் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார் .
இந்நிலையில் ‘தவமின்றி கிடைத்த வரங்கள்’ எனது தங்கைகள் இன்று இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதில் அவர் தனது தங்கைகளோடு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது அதிக லைக்ஸ் களை பெற்று வைரலாகி வருகிறது.