தனது தோழிகளுடன் இணைந்து பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை ஹன்சிகா… செம ஜாலி தான் போங்க… வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே…

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு முன்னர் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடிய பேச்சுலர் பார்ட்டி வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது ரசிகர்களால் ‘குட்டி குஷ்பு’ என கொண்டாடப்படுகிறார். இவர் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.தற்பொழுது தனது உடல் எடையை  மொத்தமாக குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

   

இதைத்தொடர்ந்து தற்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ‘மகா’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகை ஹன்ஷிகா தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறினார்.

இவரது திருமணம் வருகிற 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெறவுள்ளது. இவர் சோஹைல் காதோரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா தனது தோழியின் நெருங்கிய கணவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நடிகை ஹன்ஷிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தொடங்கிவிட்டது. தற்பொழுது நடிகை ஹன்சிகா தனது தோழிகளுடன் இணைந்து கொண்டாடிய பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.