
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகனை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது 16 வயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர் தனது 22 வயதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் 2004 இல் நடைபெற்றது. தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோலிவுட்டில் கவனிக்கத்தக்க நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் அவ்வப்போது நடிகர் தனுஷ் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகளாக இணைபிரியாத ஜோடிகளாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது வரை ரசிகர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்….
View this post on Instagram