தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் நடிகர் விஜய் வசந்த்…பலரும் பார்த்திடாத அழகான குடும்ப புகைப்படம் இதோ….

நடிகர் விஜய் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சினிமாவில் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களும் நடித்து வந்தவர் நடிகர் விஜய் வசந்த். இவர் சென்னை 600028 முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம், சசிகுமார் உடன் நாடோடிகள், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் மற்றும் சரோஜா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை வசந்த் அண்ட் கோ என்ற ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை சென்னை மற்றும் பல இடங்களிலும் நடத்தி வந்தார்.

   

இவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். தற்பொழுது தனது தந்தையை தொடர்ந்து அவரது மகன் விஜய் வசந்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்பொழுது இவர் கன்னியாகுமரி தொகுதி எம்பி ஆக செயல்படுகிறார். சினிமா துறையில் இருந்து விலகி தற்போது முழு நேரமாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சினிமா, வியாபாரம், அரசியல் என மூன்றிலும் வெற்றி நடை போட்டு வருகிறார் நடிகர் விஜய் வசந்த். நடிகர் விஜய் வசந்திற்க்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. தற்பொழுது விஜய் வசந்த் நித்யா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆகன் என்ற மகனும் திஸ்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் வசந்த்தின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.