தமிழ் சினிமாவில் சொல்லுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. நடிப்பு மட்டுமின்றி எழுத்து, இயக்கம் மற்றும் பாடல் என பன்முகத் திறமையுடன் தனுஷ் வலம் வருகிறார். இவர் சமீபத்தில் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தமிழை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருகிறார் தனுஷ். சமீபத்தில் ஹாலிவுட் தயாரான தி கிரே மேன் படம் வெளியாகிறது. அந்தப் படத்தை தொடர்ந்து தனுஷிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றபலம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என கூறப்படுகிறது.
தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தனுஷ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது மகன்களை மட்டும் அழைத்துச் செல்கிறார். அவ்வகையில் சமீபத்தில் அவர் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரது மகன்களும் உள்ளனர். தனது அப்பா,அம்மா மற்றும் அண்ணன் குடும்பம் என அனைவருடனும் தனுஷ் எடுத்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.