இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் உலக அளவில் தெரியும் அளவிற்கு ஆஸ்கர் award வாங்கிய ஒரு பிரபலம். தமிழ் சினிமா தாண்டி பல மொழி படங்களுக்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர். ரகுமான் அவர்கள். அவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளார்கள். இந்நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மானிற்கும், ரியாஸ் உதீன் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும், ரியாஸ் உதீன் அவர்கள், ஒரு சவுண்ட் என்ஜினீயர் ஆவர். ரியாஸ் உதீன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதா. மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நேற்று,
இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. திருமண தம்பதிகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.