தன்வினை தன்னைச் சுடும்…. சும்மாவா சொன்னாங்க….. நாய்க்கு போக்கு காட்டி கடலுக்குள் காரை கவிழ்த்திய இளைஞர்கள்…. வைரல் வீடியோ…!!!!

கோவாவிற்கு சுற்றுலா சென்ற டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உற்சாக மிகுதியால் கடற்கரையில் சுற்றித்திரிந்த நாயை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக கடல் அலைகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.  தற்போதெல்லாம் விலங்குகளை துன்புறுத்தி பார்ப்பதில் மனிதர்களுக்கு என்ன ஒரு ஆனந்தம் என்பது தெரியவில்லை.

   

சும்மா இருக்கும் விலங்குகளை நோண்டி அதை வெறுப்பேற்றி வருகிறார்கள். இது சில சமயம் அவர்களுக்கே ஆபத்தாக அமைந்து விடுகின்றது. அதுபோன்று ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. பொதுவாக கார்களை பார்த்தாலே நாய்கள் குறைத்துக் கொண்டே பின்னாடியே ஓடும். அந்த வகையில் கோவாவிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞர் காரை நாய் ஒன்று விரட்டியுள்ளது. அந்த நாய்க்கு போக்கு காட்ட வேண்டும் என்பதற்காக கடல் அலையை ஒட்டி காரை வட்டமடித்து வட்டம் படித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

பாறைகளும் குழிகளும் நிறைந்த அந்தப் பகுதியில் அவர் ஆழம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஆக்சிலேட்டரை சற்று அழுத்தி மிதிக்க அடுத்த நொடியே கடலுக்குள் சென்ற ஹூண்டாய் கார் பாறையில் இடித்து சிக்கிக்கொண்டது. நாயை அலைய வைக்க வேண்டும் என்று நினைத்த இளைஞர்கள் தற்போது ஆபத்தில் சிக்கிக் கொண்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எப்படியோ இவர்கள் அந்த காரில் இருந்து மீண்டு வந்தனர். ஆனால் கார் கடலோடு கடலாக சென்றுவிட்டது. நாய்க்கு விளையாட்டு காட்ட எண்ணி பின்னர் தங்கள் காரை இழந்தது தான் மிச்சம்.