தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்…. முதல்வர் முதல் திரைபிரபலங்கள் வரை குவியும் வாழ்த்துக்கள்… 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் முதல் பல திரைப்பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடத்துனராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். ஆனால் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். “வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டுபோகல” என்ற வசனத்திற்கு ஏற்ப தற்பொழுதும் நடிப்பில் கலக்கி கொண்டு வருகிறார்.

   

இவரது பயணம் சாதாரண பயணமாக இல்லை, அவர் இமயமலை செல்வது போல் அவரது சினிமா பயணமும் மிகவும் கடினமானது தான். எவ்வளவு கஷ்டம், பிரச்சனை, தோல்வி, சர்ச்சை என பல விஷயங்களை தாண்டி தான் இப்போதும் நம்பர் ஒன்  நடிகராக வலம் வருகிறார்.

அபூர்வ ராகம் தொடங்கி தர்பார் வரை தன்னுடைய நடிப்பாலும், முயற்சியாலும் திரைத்துறையில் சாதனை படைத்தவர் ரஜினி. தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘பாபா’ திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. தற்போது ரஜினி ரசிகர்கள் அவரது படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதோ அவர்களின் ட்விட்டர்  பதிவுகள்….