தம்பி எதிர் காலத்துல நீ பெரிய ஆள வரணும்டா..!! ஒட்டுமொத்த இணையவாசிகள் வாழ்த்தை பெற்ற சிறுவன்.. மனதை உருக வைக்கும் காணொளி

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத் துள்ளல் போடுவார்கள்.

   

அதிலும் குறிப்பிட்ட வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தை இணையவாசிகளை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

சில குழந்தைகள் உலகை ரசித்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களது அம்மா, அப்பா நன்கு வசதியானவர்களாக இருப்பார்கள். குழந்தையும் ஜாலியாகவே வளரும்.

ஆனால் சில இடங்களில் குழந்தைகள் அதீத பொறுப்புடனும் சூழல் காரணமாக வளர்ந்து விடுவது உண்டு. இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக்குழந்தையின் பொறுப்பு இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அந்தக் குட்டிக்குழந்தையின் அப்பா சாலையோர உணவகம் தள்ளுவண்டியில் போட்டிருக்கிறார். அங்கே வந்திருக்கும் வாடிக்கையாளர்களின் சத்தம் ஒருபக்கம் என்றால், இன்னொரு புறத்தில் வாகனங்களின் இரைச்சல் வேறு!

இப்படியான சூழலுக்கு மத்தியில் அந்த கடைக்காரரின் குட்டிக் குழந்தை தன் பாடப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு எதிர்கால கனவோடு படித்துக்கொண்டு இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்த்தாலே நமக்குள்ளும் சக்தி பிறக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.