தல அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க.. ஷா க் ஆகிடுவீங்க..!

தல அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்த நடிகை இப்போது செம குண்டாக ஆள் அடையாளமே தெரியாமல் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பாடகி, நடிகை, இசையமைப்பாளர், பேச்சாளர், பிஸ்னஸ் வுமன், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முகத்தன்மை கொண்டவர் வசுந்தரா தாஸ்.

   

தல அஜித் நடித்து மெகா ஹிட்டான சிட்டிசன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்தார். இதுபோக ஏ.ஆர்.ரஹ்மான் முதல் ஜீ.வி.பிரகாஷ் வரை பல முண்ணனி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருக்கிறார். இப்போது பெங்களூரில் தி ஆக்டிவ் என்னும் ஸ்டூடியோவில் இசையமைக்கிறார். வசுந்தரா தாஸ் பிரபலமான நபராக வலம் வந்தாலும் தமிழில் கமலின் ஹேராம் மூலம் எண்ட்ரி ஆனார்.

பாரம்பர்யமான தமிழ் குடும்பத்தை சேர்ந்த இவர், வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான். ஷங்கர் இயக்கி ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தின் ஷக்கலக்க பேபி பாடல் வசுந்தரா தாஸ் தான் பாடியிருந்தார். இந்த பாடலும் மெகா ஹிட் ஆனது. தமிழில் ஹேராம், சிட்டிசனுக்குப் பிறகு போதிய படவாய்ப்புகள் இல்லாததால் இந்தி, தெலுங்கு, மான்சூன் வெட்டிங் என்னும் ஆங்கிலப்படம் என ஒரு ரவுண்ட் வந்தார்.

இந்நிலையில் இப்போது 44 வயதாகும் வசுந்தராதாஸ் செம குண்டாக ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த வசுந்தராதாஸ் இப்படி ஆகிட்டார்? என கமெண்ட் செய்துவருகின்றனர்.