தமிழ் திரையுலகில் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே. தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர் தல அஜித். இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கிவர, போனி கபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது. தல அஜித்துடன் இணைந்து ஜோடியாக நடித்த பல நடிகைகளில், நயன்தாரா மற்றும் த்ரிஷா தற்போது வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
அப்படி சமீபத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் கூட அஜித்துடன் இணைந்து நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக என்னுடைய மீதி சம்பளத்தை கொடுத்தால் தான் அஜித்தின் படத்தில் நடிக்க வருவேன் என்று கூறிவிட்டாராம் நடிகை நயன்தாரா. இந்த தகவல் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நமது நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இந்த அந்த முழு வீடியோ..