தளபதி விஜய் வீட்டின் முழு மதிப்பு என்ன தெரியுமா? இத்தனை கோடிகளா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். இவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் விஜய் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

   

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் தங்களின் வீட்டை பல கோடி செலவு செய்து கட்டியுள்ளனர், அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் கூட சென்னை போயஸ் கார்டனில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் தனது சொந்த வீட்டை சுமார் 120 கோடி அளவில் செலவு செய்து கட்டியுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த தகவலில் அவரது நிகர சொத்து ரூ.126 கோடி என்பது தெரியவந்துள்ளது. விஜய் ஒரு திரைப்படத்துக்கு 26 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ ஆடி போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் ஆறு இருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 4 கோடி என்பது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.