திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை நஸ்ரியா…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க…

நடிகை நஸ்ரியாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘நேரம்’ திரைப்படம் வரும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி ‘திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்தார். தொடர்ந்து வாயை மூடி பேசவும் ,திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

   

இதைத் தொடர்ந்து மலையாள முன்னணி இயக்குனர் பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை  2014ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.