திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர்.
இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது.
அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு. அந்தவரிசையில் இங்கே, ஒரு கல்யாணப் பொண்ணு திருமணம் முடிந்த கையோடு செல்லம்மா..செல்லம்மா பாடலுக்கு செம ஆட்டம் போடுகிறார்.