“திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் – வீட்டு முன் கச்சேரி வைத்த காதலி !!காதலித்து பழகி ஏமாற்றியதால் நூதன போராட்டம் !

மத்தியப்பிரதேசத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் பேண்ட் வாத்தியக் குழுவுடன் சென்று காதலி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவருக்கும் இவரது அத்தை மகளுக்கும் 2ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்ததன் காரணமாக உடல் ரீதியாக நெருங்கி பழகியுள்ளனர்.

   

 

பின்னர் மவுரியாவுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன் அத்தை பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்தது மட்டுமின்றி வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் முயற்சிகள் நடைபெற்றது.

இதனை அறிந்த காதலி குடும்பத்தினர் மற்றும் பேண்ட் வாத்தியக் குழுவுடன் காதலன் வீட்டிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் மவுர்யா ராணுவ வீரர் என்பதால் ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.