திருமணம் முடிந்த கையோடு தமிழ்பாடலுக்கு செம ஆட்டம் போட்ட மலையாளப் பொண்ணு… என்ன அழகான ஆட்டம் பாருங்க…வீடியோ இதோ..

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

   

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு. அந்தவரிசையில் இங்கே, ஒரு கல்யாணப் பொண்ணு திருமணம் முடிந்த கையோடு செல்லம்மா..செல்லம்மா பாடலுக்கு செம ஆட்டம் போடுகிறார். இதில் கல்யாணப் பெண்ணின் ஆட்டம் யுடியூப்பில் செம வைரலாகி வருகிறது. மணக்கோலத்தில் கழுத்து நிறைய நகைகள், பட்டு உடுத்திக்கொண்டு செம ஆட்டம் ஆடுகிறார் இந்த மலையாளப் பெண். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.