திருமண பந்தியிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா..? இணையத்தில் வைரலாகும் புதுமண தம்பதியின் வைரல் காணொளி

ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். அப்படி ஒரு திருமணத்தில் நடந்த ஒரு சுவாரசிய காட்சிய பார்க்கப்போகிறோம்.

குறித்த இந்த வீடியோ காட்சியில் மணமக்கள் டைனிங் ஹாலில் உணவு விருந்து நடந்து கொண்டிருந்தது. அப்போது கல்யாணப் பெண், மாப்பிள்ளையை கூப்பிட்டு அதோ பாருங்க என தூரமாக இருக்கும் ஏதோ ஒன்றைக் காட்டுகிறார். உடனே மாப்பிள்ளையும் திரும்பி பார்க்கிறார்.

அங்கு எதுவுமே இல்லை. மீண்டும் அவர் குனிந்து இலையைப் பார்த்தபோதுதான் இலையில் இருந்த போண்டாவை தன் பொண்டாட்டி சுட்டிருப்பது தெரியவந்தது.

ஆனாலும் மனம் தளராத மாப்பிள்ளை, மீண்டும் தன் பொண்டாட்டியிடம் இருந்து அந்த போண்டாவை வாங்கிவிட்டார். இந்தக் காட்சிப் பார்க்கவே செம க்யூட்டாக இருக்கிறது. தற்போது அந்த வீடியோ பதிவானது வைரலாகி வருகிறது. நீங்களே பாருங்க