தமிழ் திரையுலகில் ‘இது என்ன மா யம்’ படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர், இவருக்கென்றே ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம்.
மேலும் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பெண்குயின் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே பிரபல OTT தளங்களில் வெளியானது. அதுமட்டுமின்றி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் மிகவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது.
அனிருத்தும், எனது மகளும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு “Love in its purest form!” என கேப்ஷன் போட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram