சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.தற்போது அவர் சினிமா வரை முன்னேறிவிட்டார்.m வாணி போஜன் அளவுக்கு தெய்வமகள் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகைதான் ரேகா கிருஷ்ணப்பா. இவரது கதாபாத்திரத்தை பார்த்து தமிழ்நாட்டில் திட்டாத பெண்களே கிடையாது.
மாபெரும் வெற்றி பெற்ற தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டாமல் இருந்தார் ரேகா. ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகளுடன் ரேகா கிருஷ்ணப்பா அரைக்கால் டவுசரில் மாடர்ன் உடையில் கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நம்ம அண்ணியா இப்படி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருகி வருகின்றனர். அந்த அளவுக்கு பார்த்த உடனே பத்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அண்ணியார்.
மேலும் பக்கத்தில் இருக்கும் தன்னுடைய பொண்ணுகே டஃப் கொடுப்பார் போல எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரேகா கிருஷ்ணப்பாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.