
நடிகை சைத்ரா ரெட்டி தனது தோழிகளுடன் இணைந்து அந்தரத்தில் தொங்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘கயல்’. இந்த சீரியலில் கயல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சைத்ரா ரெட்டி. அப்பாவினால் கைவிடப்பட்ட தனது குடும்பத்தை ஒரு மூத்த மகளாக எடுத்து நின்று, குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் எப்படி போராடுகிறார் என்பதே இந்த சீரியலின் கதை.
இவருக்கு ஜோடியாக எழிலரசன் கதாபாத்திரத்தில் ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை சைத்ரா ரெட்டி முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் நடித்த ஸ்வேதா என்ற வில்லி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘வட்டம்’ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் தற்பொழுது தனது தோழிகளுடன் இணைந்து துபாயில் சாகசம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது இவர் 54 ஆவது மாடிக் குடியிருப்பில் இருந்து தொங்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ….
View this post on Instagram