நடிகர் அப்பாஸா இது? உடல் எடை கூடி குண்டாக எப்படி மாறிட்டாரு பாருங்க! புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, இனி எல்லாம் சுகமே, ஜாலி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். இதன் பின்னர் அதிகமான பெண் ரசிகர்கள் கொண்ட அப்பாஸ் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, தெலுங்கு பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

   

பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து 90ஸ் ரசிகர்களின் மனதில் சாக்லேட் பாயாக இடம்பிடித்தார். இதையடுத்து, ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய எரும் அலி, ஃபேஷன் டிசைனரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளன. ஒரு காலத்தில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்த நடிகர் அப்பாஸ், தற்போது வெளிநாட்டில் ஐ.டி ஊழியராக பணிபுரிந்து வருகிறாராம்.

சமீபத்தில் கூட இவரது மனைவி, மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் அப்பாஸ், சமீபத்தில் எடுத்து வெளியிட்ட புகைப்படத்தில் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார் என ஷாக்காகி கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..