
தமிழ் சினிமாவில் இன்று வரை அனைவராலும் கொண்டாடப்படும் ரசிகர்களில் ஒருவர்தான் நடிகர் அர்ஜூன். ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இவர். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக பலம் வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் திடீரென காலமானார்.
அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். பின்னர் அவரின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் என்று நடைபெற உள்ளது. தாயாரின் மரணம் மற்றும் இறுதி சடங்கு குறித்து அர்ஜுன் குடும்பம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமான நிலையில் தற்போது குடும்பத்திற்கு மீண்டும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அர்ஜுனனின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…