ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று அனைத்து நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ். தமிழ் தெலுங்கு என்று இதுவரை 100 கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது படங்களில் காமெடி ரோல்களில் நடித்து இந்த கால இளைஞர்கள் மத்தியிலும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.நடிகர் ஆனந்த்ராஜ் 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நடித்து வந்தாலும் இவரின் குடும்பத்தி பற்றிய தகவல்கள் பல பேர் அறிந்திடாத ஒன்று. நடிகர் அனந்த்ராஜிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் நடிகர் ஆனந்த்ராஜின் இரு பிள்ளைகள் மீடியாக்கள் பார்வையில் பட்டதுக்கிடையாது.
ஆனால் ஒரு பேட்டியில் ஆனந்த ராஜ் தனது மனைவிக்கு தான் வில்லனாக இருப்பது தான் மகிழ்ச்சி என்றும் ஒரு வேலை நான் ஹீரோவாக இருந்திருந்தால் மற்றவர்கள் தம்மை கிண்டல் செய்திருப்பார்கள் என்றும் ஆனந்த்ராஜ் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஆனந்த்ராஜும் தனது பிள்ளைகள் இருவரையும் எந்த ஒரு பட விழாக்களுக்கோ , பொது நிகழ்ச்சிகளுக்கோ அழைத்து சென்றது இல்லை. அதனால் இவர்களது தனிப்பட்ட விவரங்கள் அவ்வளவாக கிடைக்கப்பெறவில்லை. தற்போது ஆனந்த் ராஜின் மகள் மற்றும் மகன் இருவருமே கல்லூரி செல்லும் வயதில் தான் உள்ளனர். விரைவில் அவரது மகனோ அல்லது மகளோ சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.