நடிகர் ஆர்யாவின் இந்த புகைப்படங்களை இதுவரை நீங்க பாத்துருக்கவே மாட்டீங்க… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளே….

நடிகர் ஆர்யாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் கலகலப்பாக அனைவரிடமும் பழகக்கூடிய ஒரு பிரபலம் நடிகர் ஆர்யா. இவர் சினிமாவை பொறுத்த வரையில் மிகவும் ஜாலியான நல்ல திறமையுள்ள ஒரு நடிகர். 2021ல் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் இவர் நடிப்பில் வெளியானது.

   

இப்படத்திற்காக நடிகர் ஆர்யாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. இதை தொடர்ந்து ‘டெடி’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளியான ‘கேப்டன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது.

தற்பொழுது நடிகர் ஆர்யாவின் நடிப்பில் தி விலேஜ் எனும் வெப் சீரியஸ் உருவாகி கொண்டு வருகிறது. இவர் நடிப்பில் மட்டுமின்றி சைக்கிளிங்கிலும் தேர்ச்சி பெற்றவர். சமீபத்தில் கூட ஒரு 1540 கிலோ மீட்டர் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்து மாபெரும் சாதனையை படைத்தார்.

நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை காதலித்து 2019ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை அண்மையில் பிறந்தது .திருமணத்திற்கு பிறகும் இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் நடிப்பு மற்றொரு புறம் சைக்கிளிங் என பிஸியாக உள்ளார். தற்பொழுது நடிகர் ஆர்யாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.