நடிகர் ஆர்யா – சாயிஷா ஜோடியின் க்யூட்டான மகளை பாத்திருக்கீங்களா?… எவ்ளோ அழகு…. இணையத்தில் முதன்முதலாக வெளிவந்த புகைப்படம் இதோ…

நடிகர் ஆர்யா தனது மகளின் புகைப்படத்தை இணையத்தில் முதன்முதலாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. சினிமாவுக்காக எப்பேர்பட்ட ரிஸ்க்கையும் எடுக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகர் ஆர்யா தன்னுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயீஷாவை  காதலித்து வந்தார்.

   

இதைத்தொடர்ந்து இருவரும் 2019ல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகின்றனர். சாயிஷா திருமணத்திற்குப் பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘காப்பான்’ படத்திலிலும், ஆர்யாவுடன் இணைந்து ‘டெடி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு 2021 இல் அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு Ariana என்று பெயர் சூட்டினர். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இவர்கள் தங்களுடைய மகளின் புகைப்படத்தை வெளி உலகத்திற்கு காட்டியதில்லை.

இந்நிலையில் தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களுடைய மகளை அறிமுகம் செய்கிறோம் என்று கூறி யுளளார் நடிகை சாயிஷா. தற்பொழுது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களுடைய மகளின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….