தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகி இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், 3 , வேலையில்லா பட்டதாரி, அசுரன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி திரைப்படங்களிலும் மற்றும் ராஞ்சனா (2013) போன்ற இந்தி திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது அவரின் ஹாலிவுட் படத்திற்காக யூஎஸ்ஏ சென்றுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் தற்போது நன்றாக வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.