நடிகர் விஜய் சேதுபதியுடன் பைக்கில் சென்ற குக் வித் கோமாளி பிரபலம்.. தீயாய் பரவும் புகைப்படம்

திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலத்தை அடைந்து வருகின்றனர். திரைப்படத்திலாவது ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் புகழும் பிரபலமும் கிடக்கும். ஆனால் இந்த சின்னத்திரைகளில் ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும். நீங்கல் அடுத்தடுத்து நிகழ்சிகளுக்கு அழைக்கப்பட்டு மேலும் பிரபலமடைந்து விடுவீர்கள்.

   

அந்தவகையில் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில், கோமாளியாக வலம் வருபவர் தான் புகழ். ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை வைத்திருக்கும் புகழின் நகைச்சுவைக்கு ரசிகர்களுக்கு அடிமை என்றே கூறலாம். தற்போது இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அதாவது புகழ் அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, நடிகர் அருண் விஜய்யின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் புகழ் விஜய் சேதுபதியுடன் பைக்கில் செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.