நடிகர் விமலின் மனைவியை பார்த்துள்ளீர்களா? என்ன தொழில் செய்கின்றார் தெரியுமா? முதன்முறையாக வெளியான குடும்ப புகைப்படம்

களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் இதற்கு முன்னர் கில்லி, கிரீடம், குருவி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார் விமல். பின்னர் பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து தூங்கா நகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு தனது சிறுவயது தோழி அக்சயா உடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த திருமணம் ஒரு பெரிய ரன்னிங்-சேஸிங் திருமணம். சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார் அக்சயா. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனை பார்த்த அக்சயாவின் பெற்றோர் அவளுக்கு ஒரு டாக்டரைதான் திருமணம் செய்து வைப்போம் எனவும் நடிகருக்கு எங்கள் பெண்ணை தரமட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

அப்போது கும்பகோணத்தில் ‘எத்தன்’ பட சூட்டிங்கில் இருந்தார் விமல். இரவோடு இரவாக இரயில் ஏறி கும்பகோணம் வந்துவிட்டார் அக்சயா. அங்கு ஒரு முருகன் கோவிலில் வைத்து அக்சயாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விமலின் அண்மைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *