வெள்ளித்திரையில் நடித்து பிரபலமடைவது என்பதே பெரிய போட்டியாக இருக்கும் நிலையில் தனது நடிப்புத்திறமையாலும் மேலும் தமிழ் சினிமாவில் மாற்றங்களை கொண்டுவர எண்ணி திரைப்பட நடிகர் சங்க செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருபவர் ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் விஷால்.2004-ம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சண்டக்கோழி,திமிரு போன்ற அதிரடி படங்களின் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றார்.
விஷால் தெலுங்கு பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஜி.கே ரெட்டியின் மகனாவார்.தெலுங்கை தாய்மொழியாக கொண்ட விஷால் தெலுங்கில் காட்டிலும் தமிழிலேயே பல படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ரசிகர்களின் பட்டாளத்தை வைத்துள்ளார்.
விஷால் கதாநாயகனாக அறிமுகமாவதற்கு முன் ஏழுமலை, வேதம் போன்ற படங்களில் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தொடர்ந்து ஆக்சன் படங்களிலேயே நடித்து வந்த விஷால் பாலாவின் இயக்கத்தில் அவன் இவன் படத்தின் மூலம் தனது நடிப்புத்திறமையின் வேறு பரிமாணத்தை வெளிகாட்டினார்.
அதன் பின் பல படங்களில் நடித்த.விஷால் தமிழில் 29 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அவன் இவனைத் தொடர்ந்து துப்பறிவாளன்,நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பலத்த கைதட்டல்களை பெற்றது மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றார் எனலாம்.
மேலும் சினிமா படங்களில் நடிகனாக நடிப்பதை தவிர்த்து அரசியலிலும் தனது கால் தடத்தை பதிக்க எண்ணி ஜெயலலிதா இறந்ததற்கு பின் அவரது தொகுதியான ஆர்.கே நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.ஆனால் அது சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டது.விஷால் ஆக்சன் ஹீரோ என்பது தெரியும் ஆனால் சமீபத்தில் ஆக்சன் எனும் பெயரிலேயே வெளியான திரைப்படத்தில்படம் முழுவதும் அதிரடியாக மிரட்டி இருப்பார் விஷால்.
இந்நிலையில் விஷால் திரைப்பயணத்தை தொடங்கியது செல்லமே திரைப்படத்தில் தான் என நினைத்தோம் ஆனால் அவர் 1989-ம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கி நடித்த “ஜாடி கேத்த மூடி “திரைப்படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.அந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியள்ளார்.சிறு வயதிலேயே தன் திரையலக பயணத்தை தொடங்கிய விஷால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவராக இருக்கும் விஷால் அவரது தயாரிப்பில் தற்போது வெளியாகி சக்ரா எனும் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.