நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணம்.. மணப்பெண் யாரு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் நடிகர் விஷ்ணு விஷாலும் தற்போது காதலித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் முதன் முறையாக ஜுவாலா கட்டவுடன் தனது திருமணம் பற்றி கூறியுள்ளார்.

   

சீக்கிரமே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்பதும், தேதி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியிருந்தார். பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புதிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார். “சீக்கிரமே மணமகள் ஆகப் போகிறேன்” என்ற வாசகத்தை அணிந்து திருமணத்துக்கு முன்பான இந்த பார்ட்டியை அவர் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். எனவே சீக்கிரமே விஷ்ணு விஷால் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். எனினும் தனது மகன் ஆர்யன் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.