நடிகை ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தை அப்படியே கொண்டுள்ள பாகிஸ்தானி பெண்!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார். அந்த வகையில் பிரசாந்துடன் ஜீன்ஸ், அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டுகொண்டே, விக்ரமுடன் ராவணன், ரஜினியுடன் எந்திரன் என அவரின் படங்கள் இன்றும் ரசிக்கப்படும் ஒன்று. மேலும் தற்போது மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

மேலும் பாலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனின் மருமகளாவும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியாகவும் சினிமாவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யாராய் இடையில் அவ்வப்போது சினிமாவில் தோன்றி வந்தார். அதுமட்டுமல்லாமல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்படுவார். இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் தனது பிறந்தநாளை அவரின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா உடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராயின் தோற்றத்தை இயற்கையாக கொண்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்னின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஆம், பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தான் ஆம்னா இம்ரான். இதோ அவரின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..