80 -90 களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கௌதமி. வசந்தமே வருக என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமாகி, 1987ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கௌதமி. பின்பு அனைத்து மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்றும் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தனைப் பெற்றுள்ளார். 75 படங்களுக்கு மேல் நடித்த கௌதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை காதலித்து திருமணம் செய்த பின்பு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்த கௌதமி, மகள் சுப்புலட்சுமியுடன் சென்னை வந்து, மீண்டும் நடிக்கத் தொடங்கினார். படவாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். பின்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவரை, நடிகர் கமல்ஹாசன் பார்த்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் கமலுடன் வாழ்ந்து வந்தார்.
பின்பு ஒரு சில காரணங்களுக்காகவும், மகளின் வருங்காலம் கருதியும் கமலை விட்டு விலகுவதாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். நடிகை கௌதமியின் முதல் கணவரை இதுவரை அவ்வளவாக யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். தற்போது நடிகை கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா அவர்கள் உள்ளார்.